இருமல், குளிர் காய்ச்சலை குணமாக்கும் லிங்க முத்திரை

Share this :
No comments

பல மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வியர்த்தல் உள்ளிட்ட பலனை சில நிமிடங்களில் இந்த முத்திரை தந்துவிடும்.

செய்முறை :

இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று கோத்துக் கொள்ள வேண்டும். ஒரு கை கட்டை விரலை மட்டும் உயர்த்திக்கொள்ள வேண்டும்.

சப்பளங்கால் இட்டு அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றியபடி இந்த முத்திரையைச் செய்ய வேண்டும்.

அதிகமான வியர்வை மற்றும் படபடப்பு தோன்றினால், முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.

அதிக நேரம் இந்த முத்திரையைச் செய்தால் சோர்வு ஏற்படலாம். முத்திரை செய்யும் காலங்களில் பழங்கள், பழச்சாறு, மோர், தண்ணீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

பெண்கள்: வலது கை மேற்புறமாக இருக்குமாறு கோத்து, இடது கை கட்டைவிரலை உயர்த்த வேண்டும்.

ஆண்கள்: இடது கை மேல்புறமாக இருக்குமாறு கோத்து, வலது கட்டை விரலை உயர்த்த வேண்டும்.

பலன்கள் :

* பருமனான உடல்வாகு உடையவர்கள், வியர்வை வரும் அளவுக்கு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ய இயலாதோர் காலை, மாலை என வெறும் வயிற்றில் இந்த முத்திரையைச் செய்ய, உடல் எடை குறையும்.

* வியர்வை வராமல் உடல் வறட்சியாக இருப்போர் இதைச் செய்தால், உடல் வெப்பமாகி, வியர்வை உண்டாகி சரும வறட்சியைப் போக்கும். இவர்கள் வியர்வை வரும் வரை முத்திரையைச் செய்யவேண்டும்.

* ஏ.சி-யால் அலர்ஜி இருப்பவர்கள், ஏ.சி அறையில் இருக்க வேண்டிய சூழ்நிலையில், அதிகக் குளிர், நடுக்கம் போன்றவை ஏற்பட்டால், இந்த முத்திரையைச் செய்துவர, உடல் வெப்பமாகி இதமாக இருக்கும்.

* ஆண்கள், விந்துவின் வீரிய விருத்திக்கு காலை, மாலை முறையே ஐந்து நிமிடங்கள் என்ற அளவில் ஒரு மாதம் வரை செய்ய வேண்டும்.

* காய்ச்சல் மற்றும் குளிர் காய்ச்சல் உள்ளவர்கள், முத்திரையைச் செய்ய காய்ச்சல் குறையும். ஆனால், குழந்தைகளுக்கு இந்த முத்திரை மூலம் காய்ச்சலைக் குறைக்க முயற்சி செய்யக் கூடாது.

* தலையில் நீர் கோத்தல், சளியுடன் கூடிய இருமல், குளிர் காய்ச்சல் போன்ற தொந்தரவுகளுக்கு இந்த முத்திரை நல்ல பலன் தரும்.

No comments :

Post a Comment