பரபரப்பை கிளப்பும் விஷால்-வரலட்சுமி ஃபோட்டோ!

Share this :
No comments

விஷால், வரலட்சுமி இருவரும் நீண்ட நாளாகவே நட்புடன் பழகிவருகிறார்கள். இருவரையும் சேர்த்து பல கிசுகிசுக்கள் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில் விஷால் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷால் தன்னுடைய ட்விட்டர் கணக்கில், வரலட்சுமியுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபி ஒன்றை வெளியிட்டு, “இந்தப் புகைப்படம் எல்லாமே சொல்லும்” என்று ட்விட்டியிருக்கிறார்.

இந்தப் புகைப்படத்தையும், ட்விட்டையும் பார்த்த சக நடிகர்களும், ரசிகர்களும் விஷால், வரலட்சுமியை திருமணம் செய்யப்போகிறார் என்று நினைத்து வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இதற்கு விஷால் தரப்பிலிருந்தோ, வரலட்சுமி தரப்பிலிருந்தோ எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை. தவிர, என்னுடைய வாழ்வில் ஒரு லட்சுமி இருக்கிறார் என்று முன்னர் விழா ஒன்றில் விஷால் பேசியதும் நினைவுக்கூரத்தக்கது.

விஷால், வரலட்சுமி நடிப்பில் சுந்தர்.சி இயக்கிய “மதகஜராஜா” வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு, ரிலீஸூக்கு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment