அன்றாட உணவில் புளியை சேர்க்கச் சொல்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

Share this :
No comments

சாம்பார் ஆகட்டும் அல்லது ரசம் ஆகட்டும், அதில் முக்கிய பொருளாக புளி சேர்க்கப்படும். இந்த புளியினால் தான் அவைகளின் சுவையே அற்புதமாக உள்ளது. தென்னிந்தியாவை எடுத்துக் கொண்டால், சமையலில் புளி கட்டாயம் சேர்க்கப்படும். இதற்கு பின்னணியில் நிச்சயம் ஏதேனும் காரணம் இருக்க வேண்டும்.

நம் முன்னோர்கள் காரணமின்றி, உணவில் ஒரு பொருளை சேர்க்கமாட்டார்கள். உணவில் சேர்க்கப்படும் புளி சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த தான்.

புளியில் நார்ச்சத்துக்கள், கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் போன்றவை அதிகம் உள்ளது. இப்போது நம் உணவில் புளியை சேர்ப்பதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செரிமானம் புளி பல்வேறு நாட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்ற உதவுகிறது. புளியை உணவில் சேர்ப்பதால், அதில் உள்ள நார்ச்சத்துக்களால் செரிமானம் சீராக்கப்பட்டு, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

குடல் புற்றுநோய் புளியில் உள்ள டார்டாரிக் அமிலம், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்பட்டு, உடலில் புற்றுநோயை உண்டாக்கும் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாப்பளித்து, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும். இதில் உள்ள நார்ச்சத்து, குடலில் உள்ள சளிச்சவ்வினை புற்றுநோயை உண்டக்கும் கெமிக்கல்களிடமிருந்து பாதுகாக்கும்.

இரத்த அழுத்தம் புளியில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, இதயத் துடிப்பை சீராக வைத்துக் கொள்ளும். மேலும் புளியில் உள்ள இரம்புச்சத்து, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியில் முக்கிய பங்கினை வகிக்கிறது.

இரத்த கொலஸ்ட்ரால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், புளியை சேர்ப்பதன் மூலம் குறைக்கலாம். மேலும் புளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து, இதய நோய் ஏற்படாமல் தடுக்கும்.

கண் ஆரோக்கியம் புளியில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ உள்ளது. 

எனவே இதனை அன்றாட சமையலில் சேர்க்கும் போது, கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் தடுக்கப்படும். கண்களில் ஏற்பட்டுள்ள உட்காயங்களில் இருந்து விடுபட, ஒரு டம்ளர் நீரில் சிறிது புளியை சேர்த்து கொதிக்க வைத்து பருக குணமாகும்.

நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கும் புளியை உணவில் சேர்த்து வருவதன் மூலம், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் உடலைத் தாக்கி ஏற்படும் சளி, காய்ச்சலில் இருந்து விலகி இருக்கலாம். ஏனெனில் புளியில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது.

ஆரோக்கியமான சருமம் புளியில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், முதுமைத் தோற்றத்தை வழங்கும் தீங்கு விளைவிக்கும் ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும்.

அதுமட்டுமின்றி, சரும செல்கள் பாதிக்கப்பட்டு, முதுமைக் கோடுகள் மற்றும் சரும சுருக்கங்கள் ஏற்படுவதையும் தடுக்கும். ஒருவேளை உங்களுக்கு சருமத்தில் ஏதேனும் சிறு காயங்கள் ஏற்பட்டால், சிறிது புளியை அந்த இடத்தில் வைத்தால், விரைவில் குணமாகும்.





No comments :

Post a Comment