குழந்தைகளுக்கு விருப்பமான பொரி உருண்டை வீட்டிலேயே தயாரிக்கலாம் வாங்க...
குழந்தைகளுக்கு பொரி உருண்டை மிகவும் பிடிக்கும். இதை வீட்டில் செய்வது மிகவும் எளிமையானது. தேவையான பொருட்கள் : பொரி - 2 கப், ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை, பொடித்த வெல்லம் - 1/2 கப், தண்ணீர் - 1/4 கப், நெய் - சிறிதளவு. செய்முறை : * வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவும். * கடாயில் வெல்லக்கரைசலை ஊற்றி மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். * பாகு நன்றாக கொதிக்கும் போது ஏலக்காய் தூள் சேர்க்கவும். * வெல்ல பாகு உருட்டு பதம் வரும் வரை சூடாக்கவும். * பின்னர், பொரியை பாகில் இட்டு, சிறிது சூடு ஆறிய பின், கையில் நெய் தடவிக் கொண்டு, சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். * சுவையான பொரி உருண்டை ரெடி.
Labels:
recipes
No comments :
Post a Comment