இறைவி படவிழாவில் என்னை ராதாரவி திட்டியது சரியா?...குமுறும் தொகுப்பாளினி
கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இறைவி வருகின்ற 3ம் தேதி வெளியாகிறது. இது பெண்களைப் பெருமைப்படுத்தும் கதையாக இருக்கும் என படம் குறித்து விளம்பரம் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிஷா
இந்த நிகழ்ச்சியை வளர்ந்து வரும் தொகுப்பாளினிகளில் ஒருவரான நிஷா தொகுத்து வழங்கினார். இதில் இறைவி படத்தின் ஹீரோ, ஹீரோயின்கள் பெயர்களை மட்டும் சொல்லி மற்றும் பலர் என்று பொதுவாகக் கூறிவிட்டார்.
ராதாரவி
இதனைக் கேட்ட ராதாரவி ''நான் 300 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறேன். 42 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறேன். ஆனால் என்னை யாரோ ஒருவர் போல இந்தப்பெண் அழைத்து விட்டார்.அழகிருந்தால் மட்டும் போதாது அறிவும் வேண்டும்'' என்று நிஷாவை மேடையிலேயே திட்டினார். ராதாரவியின் இந்தப் பேச்சை பலரும் கைதட்டி ரசித்தனர்.
பொது இடத்தில்
இந்நிலையில் ராதாரவியின் பேச்சுக்கு நிஷா ''அந்த விழாவில் நான் வெறும் தொகுப்பாளினி மட்டுமே. அந்த விழாவிற்கான ஸ்கிரிப்ட்டை படக்குழு என்னிடம் கொடுத்தபோது அதில் ராதாரவியின் பெயர் இல்லை.இறைவி திரைப்படத்தில் பெண்களைத் தெய்வமாகக் காட்டியிருக்கிறோம் என்று கூறுகின்றனர். ஆனால் பொது இடத்தில் வைத்து ஒரு ஆண் என்னைத் திட்டுகிறார்.
மகிழ்ச்சியுடன்
இதில் வருத்தமான விஷயம் படக்குழு என்மீது பழியைப்போட்டு அங்கு நடந்த விஷயங்களை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தது தான்'' என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.
Labels:
cinema news
No comments :
Post a Comment