மனஅழுத்தம், மனச்சோர்வை போக்கும் சின் முத்திரை

Share this :
No comments

இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் மனஅழுத்தம், மனச்சோர்வு சரியாகும். மனம் அலைபாய்வது கட்டுக்குள் வரும்.

பெருவிரல் நுனி – இது பிரம்மத்தை குறிக்கும்.

ஆள் காட்டி விரல் – இது ஜீவனை குறிக்கும்.

பிரம்மத்திலிருந்து தோன்றுவதே ஜீவன். ஜீவன் தன் பணியை முடித்து முடிவில் ஒடுங்குமிடம் பிரம்மம் இல்லையேல் பிரம்மத்திற்கு வேலை இல்லை. பிரம்மம் வெறும் பிரம்மமாகவே இயங்கும்.

அதனால் சிருஷ்டி ஏற்பட வழி கிடையாது. இவ்விரண்டு காரியங்களைக் குறிக்கவே பெருவிரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் நுனியையும் சேர்த்து நமக்கு உணர்த்துகின்றன

இந்த காரியம் ஒழுங்காக நடைபெற விலக்கப்பட வேண்டியவை ஆணவம், கர்வம், மாயை ஆகும். ஏனைய மூன்று விரல்களும் இம்மூன்றைக் குறிப்பனவாகும்.

செய்முறை :

ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைச் செய்ய வேண்டும்.

இது ரத்த அழுத்தத்தைச் சமன்படுத்தும். எந்த நேரத்திலும், எந்த நிலையிலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம். மனம், வாயுவோடு சம்பந்தப்பட்டது. மனஅழுத்தம், மனச்சோர்வு சரியாகும். மனம் அலைபாய்வது கட்டுக்குள் வரும். மனம் அமைதி பெறும்.

No comments :

Post a Comment