நட்ஸ் சாப்பிட்டால் ப்ரோஸ்டேட் கேன்சரால் வரும் இறப்பை தடுக்கலாம்!!

Share this :
No comments

ஆண்களுக்கு இரண்டாவதாக அதிகமாய் தாக்கக் கூடிய புற்று நோய் ப்ரோஸ்டேட் புற்று நோய். ஆண்களின் சிறு நீர்ப்பைக்கு அருகில் இருப்பதுதான் ப்ரோஸ்டேட் சுரப்பி.

40 வயதிற்கு பிறகு இந்த சுரப்பி விரிவடையக் கூடும். இதனால் எரிச்சல்,வீக்கம் வலி ஆகியவை ஏற்படும். இதனை அப்படியே விட்டுவிட்டால் புரோஸ்டேட் சுரப்பி மிகவும் பாதிப்படைந்து புற்று நோயை உண்டாக்கும்.

பொதுவாக 60 வயதிலிருந்து 70 வயதுள்ள ஆண்களுக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

எந்த வகை உணவுகள் காரணம்? எண்ணெயில் பொரித்த உணவுகளை நாள்தோறும் சாப்பிட்டு வருபவர்களுக்கு ப்ரோஸ்டேட் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன என மருத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.

நட்ஸ் சாப்பிட்டால் இறப்பை தடுக்க முடியும் : வாரத்திற்கு ஐந்து மடங்கு அதிகமாய் நட்ஸ் சாப்பிட்டால், ப்ரோஸ்டேட் நோயினால் வரும் இறப்பினை தடுக்கலாம் என அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆரம்ப நிலையில் ப்ரோஸ்டேட் புற்று நோய் கண்டறியப்பட்ட சுமார் 47,299 பேர்களைக் கொண்டு 26 ஆண்டுகளாய் இந்த ஆராய்ச்சி நடந்தது. இவர்களுக்கு நட்ஸ் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்தது. ஆய்வின் இறுதியில் தெரியவந்தது என்னவெனில் இவர்களில் 10 சதவீதமே ப்ரோஸ்டேட் புற்று நோயினால் இறந்தார்கள்.

மூன்றில் ஒரு பகுதியினர் மற்ற நோய்களாலும் இதய நோய்களாலும் இறந்ததாக இந்த 26 ஆண்டுகால ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஆகவே ஆண்கள் தொடர்ந்து நட்ஸ் போன்ற பருப்புவகைகளை கட்டாயம் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ப்ரோஸ்டேட் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் அரைக் கப் நட்ஸ் சாப்பிடுவதால், அந்த நோயின் தீவிரம் குறைந்து இறப்பை தடுக்க முடியும்.

இன்சுலின் எதிர்ப்புதிறன்- சர்க்கரை வியாதியில் உடலில் இன்சுலின் சுரப்பை தடுக்கும். இதனால் சர்க்கரை வியாதி உருவாகும். இந்த வகை சர்க்கரை வியாதி ப்ரோஸ்டேட் புற்று நோயிற்கும் வழிவகுக்கிறதான ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாதாம், பிஸ்தா, முந்திரி,வால் நட், ஹாஜல் நட் ஆகிய பருப்பு வகைகள் உடலுக்கு நிறை நன்மைகளை தருகிறது. இவைகள் இன்சுலின் சுரக்க உதவிசெய்கிறது. இதய நோய்களிடமிருந்தும் காக்கிறது. ப்ரொஸ்டேட் புற்று நோயினால் வரும் இறப்பு விகிதத்தை குறைக்கிறது என ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

நட்ஸ் உள்ள சத்துக்கள் : உடலுக்கு தேவையான மிக முக்கியமான சத்துக்களை நட்ஸ் கொண்டுள்ளது. நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், உயர் ரக புரோட்டின், விட்டமின், மினரல்கள்,ஆகியய்வற்றை கொண்டுள்ளன.

இந்த எல்லா சத்துக்களும் உடலில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யும். புற்று நோய் எத்ரிப்புதிறன் கொண்டுள்ள சத்துக்கள். இதயத்தை பாதுகாக்கும் ஊட்டச் சத்துக்கள். இந்த முக்கியமான அனைத்து சத்துக்களும் பாதாம், முந்திரி போன்ற பருப்புவகைகள் கொண்டுள்ளன.

No comments :

Post a Comment