இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் மூன்றாவது படமாக வெளிவரவுள்ள படம் ‘இறைவி’.
இறைவன் என்ற ஆண் பாலுக்கு இறைவி என்பது பெண் பால் என்று விளக்கம் கூறுகிறார் கார்த்திக் சுப்புராஜ்.
தனது முதல் படமான ‘பீட்ஷா’ வில் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தவர், அடுத்து மதுரையை களமாக கொண்டு ‘ஜிகர்தண்டா’ என்ற படத்தை இயக்கினார். பீட்ஷா படத்தில் நடித்த விஜய் சேதுபதியை பலருக்கும் பிடித்த மாதிரி, ஜிகர்தண்டாவில் அருமையான நடிப்பின் முலம், ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் பாபி சிம்ஹா. இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அளிக்கப்பட்டது.
தன்னுடைய படத்தின் சாயல் அடுத்த படத்தில் இருக்கக் கூடாது என்று விரும்பும் கார்த்திக் சுப்புராஜ், தன்னுடைய முதல் இரண்டு படங்களுக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் இயக்கியிருக்கும் படம்தான் ‘இறைவி’.
பெண்களின் பெருமைகளை பேசும் படமாக இறைவி உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் முக்கிய ஆண் கதாபாத்திரத்திலும், நடிகைகள் அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜாதேவ்ரியா ஆகியோர் முக்கிய பெண் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.
மற்றும் கருணாகரன், சின்னுமோகன், ராதாரவி, வடிவுக்கரசி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படம் பற்றி கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி “ நான் பட படங்களில் நடித்திருந்தாலு, இறைவி எனக்கு வித்தியாசமான படம்” என்றார்.
“இந்த படத்தில் எனது கதாபாத்திரம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது ” என்று பாபி சிம்ஹா கூறியுள்ளார்.
எஸ்.ஜே. சூர்யா கூறும்போது “இந்த படத்தில் எனது நடிப்பு திருப்புமுனையை ஏற்படுத்தும்” என்றார்.
அதேபோல் நடிகை அஞ்சலி கூறும்போது “இதுவரை நான் நடித்ததிலேயே இறைவி என்னால் மறக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
இந்த படம் பற்றி கருத்து தெரிவித்த கார்த்திக் சுப்புராஜ் “நம்முடைய வாழ்க்கையை சுற்றியுள்ள முக்கிய பெண்களான தாய், சகோதரி, காதலி, தோழி ஆகியோரின் உறவுகளைப் பற்றி பெருமை பேசும் படமாக இறைவி அமையும்” என்று கூறியுள்ளார்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இந்தப் படம் நாளை வெளியாகிறது.
No comments :
Post a Comment