பப்பாளி லெமன் ஜூஸ் செய்வது எப்படி

Share this :
No comments

பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது. பப்பாளி லெமன் ஜூஸ் எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கனிந்த பப்பாளி - 200 கிராம்

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

ஐஸ் தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* பப்பாளி பழத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

* மிக்ஸியில் பப்பாளி துண்கள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் ஐஸ் தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறினால் பப்பாளி லெமன் ஜூஸ் ரெடி!!!

* வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் இந்த பப்பாளி லெமன் ஜூஸ்.

No comments :

Post a Comment