முதியவர்களையும் பாதுகாக்கும் உடற்பயிற்சி
ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு அனைவருக்கும் சிறந்த உடற்பயிற்சி அவசியம்
ஆரோக்கியத்திற்கு வயது வரம்பு இல்லை. எனும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு அனைவருக்கும் சிறந்த உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சி செய்பவருக்கும், சாதாரண ஒருவருக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை நாம் வெளிப்படையாகக் கண்டுகொள்ளலாம்.
வயதில் முதியவர்களும் சில பாதுகாப்பான உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்ளலாம். சீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக பேண உதவுகிறது. வயது மூத்தவர்கள் ‘ஏரோபிக்’, யோகா, தசை தளர்வுக்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
இவ்வாறான பயிற்சிகள் இதய நோயின் ஆபத்திலுருந்து முதியோர்களை பாதுகாக்கும்.
அதிலும், முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஒன்றாகும்.
முறையான உடற்பயிற்சி அனைவருக்கும் பயன் அளிக்கும். வாரத்திற்கு குறைந்தது ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
Labels:
yoga
No comments :
Post a Comment