பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான ஆப்பிள் - பேரீச்சை மில்க்‌ஷேக்

Share this :
No comments

காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு எனர்ஜி தேவை. அது இந்த ஆப்பிள் மில்க்‌ஷேக்கில் உள்ளது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ஆப்பிள் - ஒன்று,

பால் - 200 மில்லி (ஒரு கிளாஸ்),

பேரீச்சம் பழம் - 10

தேன் - 3 டீஸ்பூன்.

செய்முறை :

* பாலை காய்ச்சி ஆறவிட்டு, ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும்.

* ஆப்பிளை தோல் நீக்கி துருவவும்.

* பேரீச்சம் பழத்திலிருந்து கொட்டையை நீக்கி வைக்கவும்

* ஆப்பிள் துருவல், தேன், பால், பேரீச்சம் பழம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, நன்கு நுரை பொங்க அரைத்து உடனடியாக பரிமாறவும்.

* குழந்தைகள் காலையில் பள்ளிக்கு செல்லும் போது இதை செய்து கொடுத்தால் அவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

No comments :

Post a Comment