ஆயுர்வேதத்தில் சமையல் என்பது கலர்ஃபுல்லாகவோ, விதவிதமான பசியை தூண்டும் வாசனையாகவோ இருக்காது. ஆனால் உங்கள் நலத்திற்கு 100 சதவீதம் நன்மையை மட்டுமே தரும். எந்தவிதத்திலும் உங்களை ஈர்க்காத இந்த பொருட்களை நீங்கள் தூக்கியெறிந்துவிட்டுதான் சாப்பிடுவீர்கள்.
எண்ணெயில் பொறித்த உணவுகளுமே கலர் சாயமிடப்பட்ட உணவுகளுமே உங்கள் கண்களுக்கு அமுதமாய் தெரியும். ஆனால் இவற்றின் பயன்களை தெரிந்து கொண்டபின்புமா அப்படி செய்வீர்கள்? தொடர்ந்து படியுங்கள்.
5 ஆயுர்வேத மூலிகை பொருட்கள் :
கருவேப்பிலை : நமது தென்னிந்திய உணவுவகைகளில் கருவேப்பிலையை சேர்க்காத சமையலே இல்லை எனலாம். சாம்பார், ரசம், பொறியல், உப்புமா என தொடங்கி சகலத்திலும் அதனை சேர்ப்போம்.ஆனால் சாப்பிடும்போது அதனை ஓரமாய் ஒதுக்குவிட்டுதான் சாப்பிடுவோம். ஆனால் அதிலுள்ள சத்துக்களை அறிவீர்களா?
கருவேப்பிலையில் நிறைய நார்சத்து, இரும்பு சத்து, ஆன்டி ஆக்ஸிடென்ட், விட்டமின், மினரல் ஆகியவ்ற்றை கொண்டுள்ளது. இபை ஜீரண சக்தியை அதிகரிக்கும். ரத்ததில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை குறைக்கும். ரத்த சோகையை குணப்படுத்தும்.
பிரியாணி இலை : பிரியாணி இலையை அதிகமாக வட இந்தியாவில் பயன்படுத்துவார்கள். பிரியாணி, ராஜ்மா, தால், ஃப்ரைட் ரைஸ் , ஆகியவற்றில் இதனை சேர்ப்பார்கள். இதுவும் கருவேப்பிலை போன்றே சாப்பிடுகையில் ஓரமாய் எடுத்து வைத்துவிட்டு சாப்பிடுவோம்.
ஆனால் பிரியாணி இலையில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது புற்று நோய் மற்றும் சிறு நீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும் என தெரியுமா?
புதினா : புதினா பொதுவாக எல்லா சமையலிலும் சேர்ப்போம். புதினா சட்னி, துவையல் மற்றும் சாண்ட்விச் ஆகியவற்றிற்கு சேர்ப்போம். அதுமட்டுமில்லாமல், மாலையில் சாப்பிடும் "சாட்' வகை உணவுகளில் அதிகமாய் சேர்க்கப்படுகிறது.
இது ஜீரணத்திற்கு உதவுகிறது. ஜலதோஷம், காய்ச்சல் உடல் வலி, ஆகியவற்றிற்கு எதிராக செயல்படுகிறது. வலி நிவாரணியாகவும் இருக்கிறது. அலர்ஜியை எதிர்க்கும் ஆற்றலை தருகிறது.
துளசி : துளசியை அறியாதவர்கள் யாரும் இருக முடியாது. முந்தைய காலங்களில் சமையலில் அதனை சேர்த்தார்கள். இப்போது அதனை பிரியாணி போன்ற உணவுகளில் மட்டும் சேர்க்கிறார்கள். கோவில்களில் தீர்த்தத்திலும் தரப்படுவதுண்டு.
துளசி டீ தயாரித்து குடிக்கலாம். உடலுக்கு நன்மையை தருகிறது. ஜலதோஷம், காய்ச்சல், தலைவலி, சரும நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தும். நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்யும்.
வெந்தய இலை : வெந்தய இலையை பிரியாணி, சப்பாத்தி ஆகியவற்றில் சேர்ப்போம். வட இந்தியாவில் காய வைத்து எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு கசூரி மேத்தி என்று பெயர். இது குருமா, சப்பாத்தி, பிரியாணி என எல்லாவற்றிலும் சேர்க்கப்படுகிறது.
வெந்தய இலையில் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. விட்டமின், மினரல், நார்சத்து ஆகியவற்றை கொண்டுள்ளது. சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்து. வெந்தயத்தை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் தடுக்க முடியும்.
No comments :
Post a Comment