பில்லா ரீமேக்கில சிம்பு.. இயக்குவது வெங்கட் பிரபு... 2018 ரிலீசாம்!

Share this :
No comments

சென்னை: 1980ல் ரஜினி நடித்து பெரும் வெற்றிப் பெற்ற பில்லா படத்தை, 2007-ல் ரீமேக் செய்து அஜீத் நடித்தார். அஜீத்தை தோல்விப் பாதையிலிருந்து மீட்டெடுக்க அந்தப் படம் உதவியது. அடுத்து தெலுங்கிலும் ரீமேக் ஆகி வெற்றிப் பெற்றது.

பில்லாவின் இரண்டாம் பாகமும் தமிழில் அஜீத் நடிக்க வெளியானது. ஆனால் படுதோல்வியைத் தழுவியது. அதன் பிறகு பில்லா ரீமேக் பேச்சு கொஞ்சம் அடங்கியது.

இப்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது. பில்லாவின் புதிய ரீமேக்கில் சிம்பு நடித்தால், யுவன் சங்கர் ராஜா இசையில் அதை இயக்கத் தயார் என்றும், 2018-ம் படத்தை வெளியிடலாம் என்றும் இயக்குநர் வெங்கட் பிரபு நேற்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இதைப் பார்த்த சிம்பு, 'நான் இப்பவே தயார்...

நிச்சயம் 2018-ல் படத்தை வெளியிடலாம்' என்று பதிலுக்கு ட்வீட் செய்துள்ளார். இதையெல்லாம் விட சுவாரஸ்யம் இந்த ட்வீட்களுக்கு ரசிகர்கள் போட்ட பதில். 'அப்படீன்னா நாம இந்தப் படத்தை 2028-ல் பார்த்துடுவோம்!' இதெப்டி இருக்கு?

No comments :

Post a Comment