100 கண் அறுவை சிகிச்சைக்களுக்கான செலவை ஏற்ற ஜெயம் ரவி!

Share this :
No comments

சென்னை: நடிகர் ஜெயம் ரவி 100 கண் அறுவைசிகிச்சைகளுக்கான செலவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம்வரும் ஜெயம் ரவி தற்போது போகன் படத்தில் நடித்து வருகிறார்.ரோமியோ ஜூலியட் லட்சுமணன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

போகனைத் தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் புதிய படம் உட்பட பல்வேறு படங்களில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தமாகியிருக்கிறார். சமீபத்தில் டாக்டர்.

அகர்வால் கண் மருத்துவமனையின் திறப்பு விழா ஒன்றில் ஜெயம் ரவி கலந்து கொண்டார். திறப்பு விழாவில் கலந்து கொண்டதோடு மட்டுமின்றி 100 கண் அறுவைசிகிச்சைகளுக்கான செலவையும் அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

நடிகைகளில் சமந்தா ஏழைக் குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்து வருகிறார். இதேபோல நடிகை ஹன்சிகா ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



No comments :

Post a Comment