அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுகிறீர்களா? அப்போ இதைக் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

Share this :
No comments


சென்னை: ஹோட்டலில் ரூ.500க்கு சாப்பிட்டால் ரூ.40 ஐ வரியாகச் செலுத்தவேண்டும் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதே போல செல்போன் ரீ-சார்ஜ் உள்ளிட்ட பலவற்றுக்கும் சேவை வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

மத்திய அரசின் இந்த புதிய 15 சதவீத சேவை வரி ஜூன் மாதம் 1–ந்தேதி (நாளை) முதல் அமலுக்கு வரும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாளை (புதன்கிழமை) முதல், முக்கிய சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சில சேவைகளுக்கு சேவை வரியும், மதிப்புக் கூட்டு வரியான வாட் வரியும் உண்டு. அத்தகைய சேவைகளுக்கு நாம் கூடுதல் தொகையை வரியாக கட்ட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

உதாரணத்துக்கு நாளை உயர்தர ஹோட்டலில் சாப்பிடும் போது, ரூ.500-க்கு சாப்பிட்டாலே, நாம் சேவை வரியாக ரூ.30-ம், வாட் வரியாக ரூ.10-ம் ஆக மொத்தம் 40 ரூபாயை வரியாகக் கொடுக்க வேண்டும். சில ஹோட்டல்களில் பார்சல் உணவு என்றால், அதற்குத் தனியாகவும் கட்டணம் வசூலிப்பார்கள்.

ஹோட்டல் கட்டணம் மட்டுமின்றி செல்போன் இணைப்புக் கட்டணம், இணையதள இணைப்பு கட்டணம் , விமானம், ரயில் டிக்கெட் கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணம், சொகுசு ஹோட்டல் அறை வாடகை கட்டணம், சுற்றுலா கட்டணம், சுற்றுலா பேக்கேஜ் மற்றும் சொத்துக்கள் வாங்குதல் ஆகியவற்றுக்கும் சேவை வரி அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment