உயிர் வாழத் தகுதியுள்ள மூன்று கிரகங்கள் கண்டுபிடிப்பு

Share this :
No comments


பூமியை போல உயிர் வாழத் தகுதியுள்ள மூன்று கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பெல்ஜியத்தில் உள்ள லீகோ பல்கலைகழகத்தில் நடைப்பெற்ற ஆராய்ச்சியில் உயிர் வாழத் தகுதியுள்ள 3 கிரகங்கள் கண்டிப்பிடிக்கப்பட்டுள்ளது என்று விண்வெளித் துறை விஞ்ஞானி மைக்கேல் கிலோன் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

* பூமியை போல் வாழத்தக்க திறன் கொண்ட 3 கிரகங்கள், 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள குள்ள நட்சத்திர அமைப்பில் சுற்றி வருவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

* இது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட அற்புதமான ஒன்று.

* 3 கிரகங்களும் பூமியை விட இரண்டு மடங்கு அதிகமாக கதிர் வீச்சு பெறுவதால் வசிப்பதற்கு தகுதியுள்ளது என முடிவு செய்யப்பட்டது.

* தற்போது உள்ள தொழில்நுட்பத்தைக் கொண்டு, அந்த கிரகங்களுக்கு சென்றடைய ஒரு லட்சம் ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டும் என்று விஞ்ஞானி மைக்கேல் கிலோன் கூறினார்.

மேலும் குள்ள நட்சத்திரம் என்று அழைக்கப்படும் நட்சத்திரங்கள், கிரகங்களின் மையப்பகுதியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments :

Post a Comment