உலகில் பதில் கிடைக்காத பல விஷயங்களில் முக்கியமானதாக இருப்பது ஏலியன்கள் தான். பூமியில் ஏலியன்கள் வாழ்ந்து வருகின்றது என ஆய்வாளர்களும், யுஎஃப்ஒ வல்லுநர்களும் அடிக்கடி கூறி வரும் நிலையில் இவர்களின் கருத்துகளுக்கு இன்று வரை யாரும் தெளிவான விளக்கமும் பதிலும் அளிக்கவில்லை.
ஏலியன்கள் இருப்பதே இன்று வரை கேள்விகுறியாக இருக்கும் நிலையில் பூமியில் மனித-ஏலியன் சமூகம் அதிகரித்து வருவதாக மிக்யெல் மென்டோன்கா என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கலப்பினம்
சக மனிதர்களின் உடலில் ஏலியன் மரபணு செலுத்தப்பட்டு பலர் நம்முடன் உலகில் வாழ்ந்து வருகின்றனர் என்ற அதிர்ச்சியை ப்ரிஸ்டலை சேர்ந்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
நோய்
கலப்பினங்களுடன் அதிக தொடர்பு இருக்கும் போது எம்எஸ் எனும் நோயில் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தியதாக இவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எம்எஸ் நோய்
இந்த எம்எஸ் நோய் ஏற்ப்பட்டால் உடலில் நரம்பியல் கோளாறுகள், உடல் வலி, தசை வலி, மன ரீதியான பிரச்சனை ஏற்படும்.
மேலாளர்
மென்டோன்கா, வோர்ல்டு பியூச்சர் கவுன்சிலின் முன்னால் ஆய்வு மேலாளராக பணியாற்றியதோடு பசுமை சக்தி குறித்து அதிகளவில் எழுதியிருக்கின்றார்.
புத்தகம்
இவரது சமீபத்திய படைப்பு தான் Meet The Hybrids: The Lives And Missions of ET Ambassadors On Earth, அமேசான் மூலம் வெளியிடப்பட்டது. இப்புதகத்தை இணைந்து எழுதயவர் பார்பரா லேம்ப்.
நேர்காணல்
இந்த புத்தகத்திற்காக, உடலில் ஏலியன் டிஎன்ஏ பொருத்தப்பட்ட எட்டு பேருடன் நேர்காணல் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆய்வாளர்
லேம்ப் 1980 முதல் ஏலியன் சார்ந்த ஆய்வுகளில் ஈடுப்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திட்டம்
'ஆய்வை துவங்கும் போது எவ்வித குழப்பமும் இவ்லை, ஆனால் ஆய்வினை முடிக்கும் போது, யுஎஃப்ஒ'க்கள் பூமிக்கு வந்து செல்வது குறித்த உண்மை வெளியாகியுள்ளது' என மென்டோன்கா தெரிவித்துள்ளார்.
கலப்பினம்
மனித-ஏலியன் கலப்பினங்களானது அதிர்வு மற்றும் மக்களை விழிப்படைய செய்கின்றது. மேலும் இந்த திட்டமானது மறுக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது என மென்டோன்கா தெரிவித்துள்ளார்.
பேச்சு
மனித-ஏலியன் கலிப்பனங்களுடன் பேசும் போது வித்தியாசமான உணர்வு ஏற்படும் என்றும் அவர் கூறுகின்றார்.
ஆய்வு
மனித-ஏலியன் கலப்புடையவர்களிடம் ஒரே வகையான கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரபணு
மனிதர்களில் செலுத்தப்பட்டிருக்கும் ஏலியன் மரபணுக்கள் பெரும்பாலும் வெவ்வேறு வகையான ஏலியன்களுடையது என்பதும் தெரியவந்துள்ளது.
ஏலியன்
ஏலியன் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள இது போன்ற ஆய்வுகள் உதவியாக இருக்கும் என்றே கூற வேண்டும்.
No comments :
Post a Comment