அம்மா தெரியும்... சில்வர் மதரைத் தெரியுமா? - உங்களை ஆச்சர்யப்படுத்தும் 6 கேட்ஜெட்ஸ்!

Share this :
No comments


அட! இப்படியெல்லாம் கேட்ஜெட்ஸ் இருக்கிறதா என உங்களை ஆச்சர்யப்படுத்தும் ஆறு கேட்ஜெட்ஸ் இங்கே...

1. ஃபோன் சோப் க்ளீனர்

எல்லாவற்றையும் விட அதிக அழுக்காவது மொபைலாகத்தான் இருக்கும். இந்த ஃபோன் சோப் க்ளீனரில் ஃபோனை வைத்தால், ஒரு பக்கம் சார்ஜ் ஆகிக்கொண்டே உங்கள் ஃபோனை சானிடைஸும் பண்ணிவிடும்

2. ஃபோட்டோ ஷேரிங் டிவைஸ்

ஒரு டெராபைட் அளவிலான இந்த சின்ன கேட்ஜெட்டில், நாலு லட்சம் ஃபோட்டோக்கள் வரை சேமித்துக் கொள்ளலாம். அதைவிட, இதிலிருந்தே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம் என்பதே இதன் சிறப்பு.

3. ஸ்லீப் ஹெட்பாண்ட்

பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கும் இசைப்ரியர்களுக்கானது. ஸ்பீக்கரில் கேட்டால், பிறருக்குத் தொல்லை. இயர் ஃபோன் என்றால், காதை அழுத்திக் கொண்டிருக்கும் அல்லது நீளும் ஒயர்கள் உறங்கும்போது உங்களை உறுத்தும். அதற்காக வந்திருக்கிறது இந்த ஹெட் பேண்ட். சரியாக காதுக்கருகில் மிக மெல்லிய தடிமனில் ஸ்பீக்கர்கள். ப்ளுடூத்தில் இயங்கும் இதை அணிந்து கொண்டு ‘வரம் தந்த சாமிக்கு’ கேட்டபடியே தூங்கலாம்.

4. சில்வர் மதர்

வீட்டில் வயதான தாத்தா பாட்டி இருப்பார்களென்றால், அவர்களை கவனித்துக் கொள்ள இந்த ஒரு கேட்ஜெட்டை நீங்கள் விரும்புவீர்கள். ‘சில்வர் மதர்’ என்ற அருமையான பெயருடைய இது நான்கு ‘மோஷன் குக்கீஸ்’ உடன் கிடைக்கும். அதாவது பென் டிரைவ் அளவிலான சென்சார்கள். நம் வீட்டு பெரியவர்களின் தேவைக்கேற்ப, அதை பயன்படுத்தி, அவர்களை கவனித்துக் கொள்ளலாம். ஒன்றை மெத்தைக்கு கீழே வைத்தால், அவர்களது உறக்கத்தை கவனித்து, உங்கள் ஃபோனில் இருக்கும் ஆப்-பிற்கு தகவல் அனுப்பும். மாத்திரை சாப்பிட மறந்தால் அழைத்துச் சொல்லும். இதேப்போன்று அவர்களது உடல்நிலை குறித்து உங்களுக்கு அறிவித்துக் கொள்வதை சேமித்து வைத்துக் கொண்டு, மருத்துவரிடம் அழைத்துச் செல்லும்போது நீங்கள் கலந்துரையாடவும் உபயோகப்படும்.

5. கோடென்னா

ஒரு காட்டு காட்டிய சென்னை மழையின்போதெல்லாம் இது இருந்திருந்தால் மிகவும் உதவியாக இருந்திருக்கக் கூடும். ‘கோடென்னா’ வைஃபை, நெட்வொர்க் இல்லாமலும் நண்பர்களோடு தொடர்பிலிருக்க உதவும் கேட்ஜெட். இந்த கோடென்னாவை வைத்திருக்கும் நண்பர்களோடு செய்தியை அனுப்பிப் பேசிக்கொள்ளலாம், உங்கள் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

6. வொண்டர் க்யூப்

உள்ளங்கைக்குள் அடங்கிவிடக்கூடிய, சதுரவடிவிலான சாதனம் இது. வொண்டர் க்யூப். சார்ஜிங் ஒயர், USB கேபிள், மைக்ரோSD ரீடர், எமர்ஜென்சி சார்ஜர், ஃப்ளாஷ்லைட் எல்லாம் உள்ளடக்கிய இது வெறும் மூன்றே இஞ்ச் முதல்வன்.

No comments :

Post a Comment