உருளைக்கிழங்கை ஏன் தோலுடன் சாப்பிடுவது நல்லது என சொல்கிறார்கள் தெரியுமா?

Share this :
No comments

காய்கறிகளில் பலரும் விரும்பி சாப்பிடும் ஓன்று தான் உருளைக்கிழங்கு. சிலர் இந்த உருளைக்கிழங்கை பலவாறு சமைத்து சாப்பிட விரும்புவார்கள். அதே சமயம் பலருக்கும் இந்த உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடுவது நல்லதா அல்லது தோல் நீக்கி சாப்பிடுவது நல்லதா என்ற சந்தேகம் இருக்கும். இதனைக் குறித்து மற்றவர்களிடம் கேட்டால், தோலில் தான் சத்து அதிகம் உள்ளது என்று ஒரு பகுதியினர் கூறுவர். மற்றொரு பகுதியினர் அதனை தோல் நீக்கிவிட்டு உண்பதே நல்லது என்று கூறுவர். இங்கு உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இரத்த அழுத்தம் சீராகும் உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் உருளைக்கிழங்கை தோலுடன் சேர்த்து வேக வைத்து சாப்பிடும் போது, அது இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, உயர் இரத்த அழுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
மெட்டபாலிசம் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை மட்டும் சீரான அளவில் பராமரிக்க உதவுவதில்லை, உடலின் சீரான மெட்டபாலிசத்திற்கும் நல்லது. மேலும் நிபுணர்களும், உருளைக்கிழங்கை தோலுடன் உட்கொள்ளும் போது, உடலில் உள்ள நரம்புகள் தானாக வலிமையடைவதாக கூறுகின்றனர்.

இரத்த சோகை இரத்த சோகை அல்லது இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள், உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் உருளைக்கிழங்கின் தோலில் குறிப்பிட்ட அளவு இரும்புச்சத்து உள்ளதால், அது உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும்.

ஆற்றல் வழங்கும் உருளைக்கிழங்கின் தோலில் வைட்டமின் பி3, நியாசின் போன்ற சக்தி வாய்ந்த உட்பொருட்கள் உள்ளது. இது ஒருவரது உடலில் ஆற்றலின் அளவை அதிகரிக்கும் உட்பொருட்களாகும். ஆகவே தான் உருளைக்கிழங்கை உட்கொண்டால், சோர்ந்து போன உடலும் சுறுசுறுப்பைப் பெறுகிறது
நார்ச்சத்து உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது என்று தெரியும். ஆனால் அந்த நார்ச்சத்து அதன் தோலில் தான் உள்ளது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே உருளைக்கிழங்கை தோலுடன் உட்கொண்டால், அதில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளைத் தடுப்பதோடு, குடல் புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும்.

No comments :

Post a Comment