வெயிலால் உங்களுக்கு தாகம் அதிகமா எடுக்குதா? அதைக் குறைக்க இதோ சில டிப்ஸ்.

Share this :
No comments

உடலில் திரவங்களை சமநிலையுடன் வைத்துக் கொள்ள உடல் ஒரு குறிப்பிட்ட முறைமைகளில் வேலை செய்கிறது. எப்போது உடலில் திரவங்களின் அளவு குறைவாக உள்ளதோ அல்லது சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவை அதிகமாகிறதோ, வாங்கிகள் மத்திய நரம்பு மண்டலத்திற்கு தண்ணீர் அவசியம் என்ற சமிக்கைகளை அனுப்பும் போது, நாம் தாகத்தை உணர்கிறோம். தினமும் எந்தெந்த நேரத்தில் எல்லாம் மறக்காமல் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று தெரியுமா? ஒருவருக்கு தாகம் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது, ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளான வாய் மற்றும் உதடு வறட்சி, மிகுந்த சோர்வு, தலைச்சுற்றல், கவனச்சிதறல், தசைப்பிடிப்புகள், தலைவலி, படபடப்பு போன்றவற்றை சந்திக்கக்கூடும். எனவே உங்களுக்கு ஏற்படும் தாகத்தின் அளவைக் குறைக்க ஒருசில டிப்ஸ்களை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்கள் ஒருவருக்கு ஏற்படும் அதிகமான தாகத்தை உணவுகள் மூலம் குறைக்க முடியும். அதற்கு காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் கோடையில் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த மற்றும் கோடைக்கால சீசன் பழங்களை தினமும் உட்கொண்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, தாக உணர்வும் குறையும். காபி, டீயைத் தவிர்க்கவும் காபி, டீயை அதிகம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த பானங்கள் உடலில் நீரின் தேவையை அதிகரிக்கும். எனவே காபி, டீ அருந்துவதைத் தவிர்த்து, பழச்சாறுகள் மற்றும் நீரை அதிகம் பருகுங்கள். ஊறுகாய், கருவாடு வேண்டாம் சிலருக்கு உண்ணும் போது ஊறுகாய் இல்லாவிட்டால், உணவே வயிற்றில் இறங்காது. ஆனால் கோடையில் இப்படி ஊறுகாய், கருவாடு போன்ற உப்பு அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால், தாகம் மேன்மேலும் தான் அதிகரிக்கும். கூல்ட்ரிங்க்ஸ் கூல்ட்ரிங்க்ஸில் கார்பன் அதிகம் இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்தாலும், உடலுக்கு எந்த ஒரு உபயோகமும் இல்லை. மாறாக தீங்கு நேரும் அபாயம் தான் அதிகரிக்கும். அதில் தாகம் இன்னும் அதிகமாக எடுக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் கோடையில் எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்டால், தலைச்சுற்றல் அல்லது மயக்க உணர்வை சந்திக்க நேரிடுவதோடு, கடுமையான தாகத்தையும் உணரக்கூடும். ஆகவே இந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

No comments :

Post a Comment