விஜய் படத்தின் பெயர் அறிவிப்பு எப்போது?

Share this :
No comments


விஜய்யின் 60 -வது படத்தை பரதன் இயக்கி வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

முன்பு பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த படத்துக்கு அழகிய தமிழ்மகன் என்று பெயர் வைக்கப்பட்டது. படம் தோல்வியடைந்தாலும், விஜய் ரசிகர்களுக்கு பிடித்த பெயராக அழகிய தமிழ்மகன் அமைந்தது.

பரதன் - விஜய் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படத்துக்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த மாதம் 22 -ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள். அன்று படத்தின் பெயரை அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

விஜய் 60 -இல் கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சதீஷ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

No comments :

Post a Comment