களையெடுக்கும் காங்கிரஸ் : 7 மாவட்ட தலைவர்கள் அதிரடி நீக்கம்
மற்ற கட்சிகளைப் போல், காங்கிரஸ் கட்சியும் தன்னுடையை கட்சி நிர்வாகிகளை களையெடுக்கும் வேலையை ஆரம்பித்துள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் 7 மாவட்ட தலைவர்களை நீக்கம் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட கமிட்டித் தலைவராக பதவி வகிக்கும் பூவை பீ.ஜேம்ஸ், வெங்கடாசலம், எஸ்.ராஜ்குமார், கே.ராம்நாத், எஸ்.கே.டி.பி.காமராஜ், வி.பாலையா, கே.டி.ராஜகுமாரவேல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களுக்குப் பதிலாக திருவள்ளூர் தெற்கு-ஜெ.பாலமுருகன், திருப்பூர் புறநகர்- கே.தென்னரசு, நாகப்பட்டிணம் வடக்கு- டி.சொக்கலிங்கம், திருநெல்வேலி மேற்கு- எஸ். பழனி நாடார், திருநெல்வேலி மாநகர்- டி.எல்.உமாபதி சிவன், கன்னியாகுமரி கிழக்கு- ஆர்.ராதாகிருஷ்ணன், கிருஷ்ணகிரி- எஸ்.நாரயணமூர்த்தி ஆகியோர் மாவட்டம் வாரியாக புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment