ஜெயலலிதா கொடுக்கும் செல்போனை டயல் செய்தால் ‘அம்மா..அம்மா’ என்று கேட்கும் : விஜயகாந்த்

Share this :
No comments


தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிண்டலடித்துள்ளார்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா நேற்று ஈரோட்டில் வெளியிட்டார். அதில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம், இலவச செல்போன், விவசாயக் கடன் ரத்து, ஆவின் பால் விலை குறைப்பு, வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என ஏகப்பட்ட திட்டங்களை அறிவித்தார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த விஜயகாந்த் “ஜெயலலிதா தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறார்.

அவர் கொடுக்கும் செல்போனை நீங்கள் டயல் செய்தால் கூட அது ‘அம்மா...அம்மா’ என்றுதான் கேட்கும்” என்று கிண்டலடித்துள்ளார்.

No comments :

Post a Comment