விஜயகாந்த் எந்த தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவார்: பிரேமலதா சூளூரை

Share this :
No comments


எந்த தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறக்கூடிய ஒரே வேட்பாளர் விஜயகாந்த் தான் என அவரது மனைவியும், தேமுதிக மகளிர் அணி செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரேமலதா அதிமுக, திமுக கட்சிகளுக்கு மாற்று தேமுதிக தான் என்று கூறினார். இதைத்தொடர்ந்து, பிரேமலதாவிடம் பல கேள்விகளை முன்வைத்தார் செய்தியாளார். அதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேடையில் பேசுவது, அதிமுக, திமுக கட்சிகள் பற்றிய கருத்து, வைகோ தேர்தலில் போடியிடாதது போன்றவை முக்கியமானது.

கேள்விகளுக்கு பிரேமலதாவின் பதில்:-

* கேப்டன் உழைத்து சோர்வானதல் அவரது பேச்சுகள் சற்று தாமதமாக இருக்கிறது.

* தமிழ்நாட்டில் ஊழலுக்கு முக்கிய காரணம் திமுக தான், கடந்த தேர்தலில் வெற்றிப் பெற்ற அதிமுக, தோல்வி பயம் ஏற்பட்ட காரணத்தால் தான் வேட்பாளர்களை தொடந்து மாற்றியது.

* வைகோ தேர்தலில் போட்டியிடாதது அவரது சுய விருப்பம், அதனால் கூட்டணியின் வெற்றிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறினார் பிரேமலதா

No comments :

Post a Comment