வயிற்றில் புளியைக் கரைக்கும் காட்சி... அப்படியென்னவாக இருக்கும்?..

Share this :
No comments

சிசிடிவி எனும் இரகசியக் கண்காணிப்பு கமெராக்களில் பேய்கள் தென்பட்டதாக வெளியாகிய பல வீடியோக்களை பார்த்திருப்பீர்கள்.

ஆனால் இங்கிலாந்தின் லூட்டன் பகுதியில் உள்ள உணவு விடுதியில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள சிசிடிவி கமெரா காட்சியானது பார்ப்பவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கின்றது.

பெண் ஒருவர் உணவு மேசையில் இருந்து உணவு அருந்திவிட்டு எழுந்து சென்ற பின்னர் மேசையில் உள்ள பொருட்கள் இழுத்து வீசப்படுகின்றன.

ஆனால் அம் மேசையில் எவரும் இருந்திருக்கவில்லை. அத்துடன் எவ்வித உருவமும் கமெராவில் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனைப் பார்த்தவர்கள் இனிமேல் உணவு விடுதிக்கு செல்லவும் அச்சப்படுவார்கள் போல இருக்கே!...

No comments :

Post a Comment