ஸ்மிருதி இராணியின் கல்வி சான்றிதழ் காணவில்லை : டெல்லி பல்கலைக்கழகம் கைவிரிப்பு
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியின் கல்விச் சான்றிதழ்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்று டில்லி பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
2004ஆம் ஆண்டு டில்லியில் தேர்தலில் போட்டியிட்ட ஸ்மிருதி இராணி, தாக்கல் செய்திருந்த பிராமணப் பத்திரத்தில், தான் டில்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றிருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அவர் கல்வி தகுதி குறித்து தவறான தகவல்களை அளித்துள்ளார் என்று எழுத்தாளர் ஆமீர்கான் டில்லி பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனால், இராணியின் கல்வித்தகுதி குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அவரின் கல்விச் சான்றிதழ்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று டெல்லி பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அதேபோல், ஸ்மிருதி இராணி வேட்பு மனு தாக்கல் செய்த போது, சான்றிதழ்கள் எதுவும் இணைக்கவில்லை என்று தேர்தல் அலுவலர் வந்திதா கூறியுள்ளார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment