முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை மறைக்க வேண்டுமா? இதோ அதற்கான சில டிப்ஸ்..

Share this :
No comments

சிலருக்கு முகத்தில் ஆங்காங்கு கரும்புள்ளிகள் மற்றும் கருமையான தழும்புகள் இருக்கும். பொதுவாக முகத்தில் இப்படி கரும்புள்ளிகள் வருவதற்கு காரணம், சருமத்தில் மெலனின் உற்பத்தி அளவுக்கு அதிகமாக இருப்பது தான். அதுமட்டுமின்றி அதிகமாக வெயிலில் சுற்றுவது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, கர்ப்பம், குறிப்பிட்ட மருந்துகள், வைட்டமின் குறைபாடுகள், தூக்கமின்மை மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் போன்றவையும் கரும்புள்ளிகள் வருவதற்கு காரணங்களாகின்றன. பருக்கள் இல்லாத முகத்தில் ஆங்காங்கு கரும்புள்ளிகள் மட்டும் இருந்தால், அவை ஒருவரின் மனதில் தாம் அசிங்கமாக உள்ளோமோ என்ற எண்ணத்தை உருவாக்கி, தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும். ஆனால் இப்படி முகத்தில் வரும் கரும்புள்ளிகளை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் எளிதில் மறைக்கலாம். எலுமிச்சை சாறு எலுமிச்சை சாற்றினை ஒரு பஞ்சில் நனைத்து, நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர்ந்ததும், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி 2 வாரங்கள் தினமும் செய்து வர, விரைவில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைவதைக் காணலாம். ஒருவேளை உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால், எலுமிச்சை சாற்றில் சிறிது நீர், ரோஸ் வாட்டர் அல்லது தேன் கலந்து முகத்தில் தடவலாம். சந்தனம் 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியில் 1 டேபிள் ஸ்பூன் கிளிசரின் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முழுமையாக வெளியேறும். உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, அதனை நேரடியாக முகத்தில் வைத்து சில நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இல்லாவிட்டால் உருளைக்கிழங்கை அரைத்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் கரும்புள்ளிகள் நீங்கும். கற்றாழை கற்றாழையின் ஜெல்லை நேரடியாக முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம். பப்பாளி பப்பாளியில் உள்ள நொதிகள், கரும்புள்ளிகளை மறையச் செய்து, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும். அதற்கு பப்பாளியை மசித்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், பழுக்காத பப்பாளியை அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

No comments :

Post a Comment